Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உப்பு மகாலட்சுமிக்கு உகந்ததாக கூறப்படுவது ஏன்...?

உப்பு மகாலட்சுமிக்கு உகந்ததாக கூறப்படுவது ஏன்...?
இந்து மரபில் கடல் உப்பு அல்லது கல் உப்பு என்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அனைவிதமான பண்டிகைகளின் போதும், உப்பு படைப்பது வழக்கம்.  துகளாக்கப்படாத கல் உப்பை கொன்டு விநாயகர் சிலையை வடிக்கும் வழக்கமும் உண்டு. 

காரணம், கடல் உப்பிற்கு பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் சக்தி உண்டு. எனவே அதன் பயன்பாடு ஆன்மீக ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடல் உப்பு என்பது சுத்திகரிப்பின் அடையாளம். எனவே வீடுகளில் கடல் உப்பை பயன்படுத்துகிற போது தீய ஆற்றல்கள் தவிர்க்கப்படுகிறத என்பது நம்பிக்கை.
 
மகாலட்சுமிக்கு பிடித்தமான பதார்த்தம் இனிப்பு. இதனால் தான் மகாலட்சுமியை வேண்டி செய்யப்படும் யாகம், பூஜைகளில் இனிப்பு பண்டங்கள் பிரதானமாக  வைப்பர். 
 
காசியில் அன்னபூரணி சன்னதியில் அம்பாள், லட்டு தேரில் புறப்பாடாவாள். இதைப்போல, உப்பும் மகாலட்சுமிக்கு உகந்ததாகும். சமுத்திரராஜனின் மகளான  மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியவள். இதனால், கடலில் கிடைக்கும் உப்பும் மகாலட்சுமியின் அம்சம் ஆகிறது. இதனால்தான், இப்போதும் கிராமப்பகுதிகளில்  மாலை வேளையில் உப்பை இரவலாகக் கொடுக்கமாட்டர். 
 
புதிதாக வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்யும்போது, அவர்களது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமென்பதற்காக உப்பு கொடுக்கும் வழக்கம் உள்ளது. "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பர். உப்பில்லாத உணவை எப்படிச் சாப்பிட முடியாதோ, அதைப்போல மகாலட்சுமியின் அருள் இல்லாமல் எந்த செயலையும்  செய்ய முடியாது என்பதே உப்பு உணர்த்தும் தத்துவம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜபம் செய்வதில் இத்தனை வகைகள் உண்டா...?