Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமபிரானின் அவதாரம் நவமி திதியில் நடந்தேறியது ஏன்...?

ராமபிரானின் அவதாரம் நவமி திதியில் நடந்தேறியது ஏன்...?
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:13 IST)
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது.


பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.

சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் இராமர். உரிய நேரம் வந்தபோது இராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார். அதர்மத்தை அழித்து, தருமத்தை நிலை நாட்டினார்.

இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.

ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ஸ்ரீராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. ஸ்ரீராம நாமம் என்ற தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது.

இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ஸ்ரீராமாவதாரம்.

பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர். இவற்றில் ஸ்ரீராம அவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்களிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான். ஆனால், ஸ்ரீராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஷ்டமி நவமி தினங்களில் எந்த நல்ல காரியத்தையும் செய்வதில்லை ஏன்...?