Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமாவாசை மற்றும் விரத நாட்களில் பூண்டு வெங்காயத்தை தவிர்ப்பது ஏன்...?

அமாவாசை மற்றும் விரத நாட்களில் பூண்டு வெங்காயத்தை தவிர்ப்பது ஏன்...?
அமாவாசை நாட்களில், தர்ப்பணம் செய்யும் நாட்களில், மேலும் விரதம் இருக்கும் நாட்களில் வெங்காயம் பூண்டை தவிர்க்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது.

அதன்படி ஆயுர்வேத மருத்துவம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள எப்போதும் பரிந்துரைப்பதில்லை. ஜோதிடம் வெங்காயம் மற்றும் பூண்டை ராகு கேது என்கிறது.

மருத்துவ ரீதியாக ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மாதத்தில் இந்த 5 நாட்களிலாவது பூண்டு வெங்காயத்தை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.
 
அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது முன்னோர்களுக்கு இடும் படையலில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது சிறப்பான பலன்களை தரும். மேலும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்யலாம்.
 
அத்துடன் அமாவாசையில் மாலையில் வீட்டின் உயரமான இடத்தில் தென் திசையில் முன்னோர்களை நினைத்து ஒரு விளக்கை ஏற்றி வைக்கலாம். இதன் மூலம் நமது சந்ததியினர் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படும் மலர் எது தெரியுமா...?