Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவசக்திகள் என்பவர்கள் யார்..? அவர்களின் பணிகள் என்ன...?

Webdunia
சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே. பராசக்தியின் வடிவங்கள் பலப்பல. 

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள். அன்னை  பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.
 
சக்தியை வழிபடும் சாக்த மதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் முதன்மையானது ஒன்பது இரவுகள் உபவாசம் இருந்து அழிபடும் நவராத்திரி விரதமாகும்.
 
நவசக்திகளின் பெயர்கள்:
 
1. மனோன்மணி: பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குவமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன்  சேர்க்கும் வல்லமை கொண்டவள்.
 
2. சர்வபூதமணி: உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.
 
3. பலப்பிரதமணி: சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.
 
4. கலவிகரணி: வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை  கொண்டவள்.
 
5. பலவிகரணி: சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல்  கொண்டவள்.
 
6. காளி: காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
 
7. ரவுத்திரி: நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.
 
8. சேட்டை: நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.
 
9. வாமை: மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments