Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவபெருமானுக்கு எந்த அபிஷேக பொருட்கள் மிகவும் உகந்தது...?

சிவபெருமானுக்கு எந்த அபிஷேக பொருட்கள் மிகவும் உகந்தது...?
சிவபெருமான் ஒரு அபிஷேகப் பிரியர் ஆவார். அதனால் ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும் சிவனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


அவ்வாறு சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. 
 
* இளநீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிடைக்கும்.
 
* சர்க்கரையினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.
 
* தீர்க்க ஆயுள் கிடைக்க, பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
* இனிய குரல் கிடைக்க, சுத்தமான தேனை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 
* தயிரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய சகல சம்பத்தும் கிடைக்கும்.
 
* தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
 
* கரும்புச்சாற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.
 
* சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 
* சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகலாம்.
 
* சிவனுக்கு திரவியங்களைக் கொண்டு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைத்து வணங்குவது சிறப்பானப் பலன்களை தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெற்றியில் விபூதி இட்டுக்கொள்வதால் என்ன பலன்கள்...?