Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த பூஜையை தொடங்கும்போதும் விநாயகரை முதலில் வழிபடுவது ஏன்...?

எந்த பூஜையை தொடங்கும்போதும் விநாயகரை முதலில் வழிபடுவது ஏன்...?
விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடப்பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலப்பாகம்  சூரியனின் அம்சமாகவும், மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளங்குவதாலேயே முதலில் விநாயகரை வழிபடுகிறோம்.
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப்பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர். பரமன் தனது தர்ம  பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத் தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில்,  எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.
 
மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப் பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள்.
 
பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக்  காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து  விட்டார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. 
 
முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான். ‘ஓம்’ என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராகவார். விநாயகரை வழிபாடு செய்தாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கும்  கிடைத்துவிடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைரவர் வழிபாட்டை எந்தெந்த நாள்களில் செய்வது நல்லது....?