Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்...?

Webdunia
ஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில்  ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும்  உண்டாகும்.
அரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.
 
கம்பளி-பருத்தி தானம்: வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்   பருத்திதானம் (பருத்தி ஆடைகள்ஆ) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.
 
தேன் தானம்: புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.
 
நெய்தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை). நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.
 
தீப தானம்: இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments