Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்கவேண்டியது என்ன...?

திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்கவேண்டியது என்ன...?
திருநீரு என்றால் ஈசனின் அடையாளம். ஆலயங்களில் வாங்கும் திருநீறு ஆண்டவனின் பிரசாதம் ஆகும். 

திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போதும் அதை நெற்றியில் வைக்கும் போதும் கவனிக்க வேண்டியவை: திருநீறு இடது கையை கீழே வைத்து வலது  கையால் வாங்கப்பட வேண்டும். நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்.
 
திருநீறை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும். திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது.
 
திருநீறு நெற்றியில் இடும்போது கவனிக்கவேண்டியது: திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று  கோடுகளாக இடுதல் வேண்டும். மூன்று கோடுகள் ஈசனின் தொழிலான 1. ஆக்கல் 2. காத்தல் 3. அழித்தல் என்பதைக் குறிக்கிறது. 
 
கிழக்கு, வடக்கு திசைகளில் நின்றாவாறே திருநீறு நெற்றியில் வேண்டும். சிவ நாமங்களான "சிவ சிவ" "ஓம் நமச்சிவாய" "ஒம் சிவாய நம" என்று உச்சரித்தல்  நல்லது.
 
திருநீறு என்றால் செல்வம் என்பது பொருள். அப்படியெனில் செல்வம் நம்முடனிருக்க திருநீறு இடுவோம். திருநீற்றினை நெற்றியில் இட்டுக்கொண்டு இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.
 
நெற்றியின் புருவ மத்தியை வைத்து தான் ஹிப்டானிசம் செய்வதாக சொல்லப்படுகிறது. தீருநீறு ,குங்குமம் வைக்கும்போது இந்த ஹிப்டானிசம் செய்வினைகள் எல்லாம்  தவிர்க்கப்படுகிறது.
 
திருநீறு நம் நெற்றியில் தேவையற்ற நீர் உறிஞ்சும் சக்தி உடையது. நாம் திருநீறு இட்டு வெளியே செல்லுதல் கண் திருஷ்டியில் இருந்து விலக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசிக்கு சென்றால் எதையாவது விட்டு வரவேண்டும் என்று கூறுவதேன்...?