Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க என்ன செய்யவேண்டும்...?

Advertiesment
வீட்டில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க என்ன செய்யவேண்டும்...?
தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும். நமது எண்ணம், செயல், பேச்சு அனைதையும், நாம் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இவை எதிர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக நம்முள் ஈர்த்துவிடும்.

வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும்.
 
வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடவேண்டாம். அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும். 
 
வீட்டிற்குள் வெறும் கால்களோட நடக்கப் பழகுங்க. பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடல் ஆற்றலை தக்க வைத்து சமன்படுத்தும்.
 
வெளியே வெட்டவெளியில், தோட்டத்தில் தினம் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களை மீண்டும் ஊக்கமளித்து நமக்கு புத்துணர்வை அளிக்கவல்லது.
 
தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும். கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வழியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்
 
தொட்டிகளில் செடிகளும் மரங்களும் வீட்டைச் சுற்றி வளர்ப்பதும் இந்த எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும்.
 
கல் உப்பு கரைத்த நீரில் குளத்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம்.
 
வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க பழக வேண்டும். வெளிச்சம் எதிர்மறையை நீக்கும். கடவுளின் மீதும் நம் மீதும் முழு நம்பிக்கை வையுங்கள். நம்முடையே தேர்வுகளே நமது விதியை தீர்மானிக்கின்றது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (21-09-2021)!