Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது தெரியுமா...?

சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது தெரியுமா...?
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. இவை மனிதர்களின் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படுகிறது. 

சூரிய கிரகணம் ஜூன் 21-ம் தேதி அதாவது நாளை (ஞாயிறு) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது. இந்த கிரகணம் முழு நெருப்பு வளையம்  போன்ற உச்சம் அடையக் கூடிய நேரம் காலை 11.49 மணி. கிரகணம் நிறைவடையக் கூடிய நேரம் மதியம் 1.30 மணி என கிரகணம் 3 மணி நேரம் 14 நிமிடம் 24  விநாடிகள் வரை நீடிக்கிறது.
 
2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். அடுத்து டிசம்பர் 14ம் தேதி நிகழும். 
 
செய்ய வேண்டிய செயல்கள் என்ன..? 
 
சூரிய கிரகணத்திற்குப் பிறகு குளித்துவிட்டு புதிய ஆடைகளை மாற்றுவதை இந்தியாவில் பலரும் பின்பற்றுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும்  மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
 
கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும் என்று கூறப்படுகிறது. சூரிய பகவான் மற்றும் இறைவனைத்  மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
 
செய்ய கூடாத செயல்கள் என்ன..?
 
கிரகணத்தின் போது மக்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க   வேண்டும்.
 
எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது. கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது. நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக்  கூடாது. சமையல் செய்யக் கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-06-2020)!