Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம் வீட்டில் ஸ்ரீ மகாலட்சுமி தேவி குடியிருக்க என்ன செய்யவேண்டும்...?

Advertiesment
நம் வீட்டில் ஸ்ரீ மகாலட்சுமி தேவி குடியிருக்க என்ன செய்யவேண்டும்...?
பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நம் வீடு எப்பொழும் மங்களகரமாக வைத்திருக்க வேண்டும். அதாவது வீட்டின் வாசலில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் சரி, அந்த வீட்டின் நுழைவுவாசலில் ஒரு நிலைக்கண்ணாடி அல்லது கற்பகவிநாயகரின் புகைப்படத்தினை வைக்க  வேண்டும்.
 
பலர் ஸ்ரீ மகாலட்சுமியின் திரு உருவ படத்தினை வீட்டு வாசலின் வெளிப்பகுதியை பார்ப்பது போல் வைத்திருப்பார்கள், இவ்வாறு வைப்பது மிகவும் தவறான முறையாகும். மஹாலட்சுமியின் திரு உருவ படத்தினை எப்பொழுதும் வீட்டின் உள்பகுதியை பார்ப்பது போல்தான் வைக்க வேண்டும்.
 
வீட்டினுள் பூஜை அறை மற்றும் சமையல் அறை இவை இரண்டும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் ஏதாவது நறுமணம்  வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அதே போல் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, ஊதுபத்தி அல்லது சாம்பூராணி போட்டு இறைவனை  வழிபட வேண்டும்.
 
வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு நாணயத்தால் பூஜை செய்து அந்த நாணயத்தை நாம் வைத்திருப்பதன் மூலம் நம் வீட்டில் மஹாலட்சுமி குடி இருப்பாள்.
 
குபேரனுக்கு மிகவும் பிடித்த உணவு பொருள் ஊறுகாய், எனவே வீட்டின் சமையலறையில் உப்பு, ஊறுகாய் மற்றும் மஞ்சள் நிறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் நம் வீட்டில் மஹாலட்சுமி குடி இருப்பாள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (23-06-2020)!