Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவற்றையெல்லாம் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது...?

Advertiesment
எவற்றையெல்லாம் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது...?
, திங்கள், 31 ஜனவரி 2022 (19:31 IST)
பசுக்கள் அல்லது பசுவின் கூட்டங்கள் எதிரில் வந்தால் அது நல்ல சகுனமாகும். எதிரே சவ ஊர்வலம் வந்தாலும் மிகுந்த நன்மையாகும்.


தலைக்கு மேல் கருடன் வலப்பக்கத்திலிருந்து இடது பக்கமாக வட்டமிட்டாலும் நல்ல சகுனங்களே. பச்சை கிளிகள் பறந்து செல்வதைப்பார்ப்பதும், வெள்ளை புறாவை பார்ப்பதும் நல்லது.

வீடு கட்டும் காலிமனைக்கு செல்லும் போது, பல்லி வலப்புறத்திலிருந்து சொன்னால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்களின் வாழ்க்கை, சிறப்பானதாக இருக்கும்.

பல்லியானது இடது பக்கதிலிருந்து சொன்னால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் மிகுந்த செல்வத்துடன் பிறரை அதிகாரம் செய்யும் அந்தஸ்துடனும் வாழ்வார்கள்.

மனையை அடையும்போது அங்கு வெள்ளைப் பசு அல்லது வெண்ணிறக் காளை மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பது மற்றும் மனையில் வெள்ளைப்புறா மற்றும் வெண்ணிறக் கோழியைப் பார்க்க நேர்ந்தால் மிகவும் நல்ல சகுனமாகும்.

நிறைகுடம் தாங்கிய சுமங்கலி, சலவைத் தொழிலாளி, சிவந்த நிற ஆடைகளை அணிந்த மூதாட்டி ஆகியோரும், யானை, குதிரை போன்றவை எதிரே வந்தாலும் நல்ல சகுனமாகும்.

பால், நெய், நீர், இறைச்சி, தயிர்குடம் போன்றவை எதிர்பட்டாலும் மிகவும் நல்ல சகுனமாகும்.

நாதஸ்வர இசை, கோயில் மணி ஓசை, கல்யாண கோலம், பசு, கன்று சேர்ந்து வருதல், நாய் சந்தோஷமாக விளையாடுதல் போன்றவை நல்ல சகுனமாகும்.

பூஜை பொருட்கள் கொண்டு செல்வது, தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி, பூ மாலை கொண்டு வரும் காட்சி நல்ல சகுனமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தை அமாவாசையின் சிறப்புக்களும் அதன் வழிபாட்டு பலன்களும் !!