Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமுத்திரிகா லட்சணம் என்பது என்ன? அதன்படி பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா...?

சாமுத்திரிகா லட்சணம் என்பது என்ன? அதன்படி பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா...?
ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று  முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
சாமுத்திரிகா லட்சணம்:
 
கால், பாதம்: ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய  வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல்  அமைந்திருக்க வேண்டும்.
 
பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது  நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும்,  அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.
 
சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண்  குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
 
காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
 
தொடை: பெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.
 
இடை: இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.
 
மார்பகங்கள்: பெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி  தர வேண்டும்.
 
கைவிரல்: பெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர  வேண்டும்.
 
கழுத்து: பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.
 
கண்கள்: பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும்.
 
விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க  வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள். வளையக்கூடிய  புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
 
கூந்தல்: பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும். கோர முடி  குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும் என்று சொல்வார்கள்.
 
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப துன்பப்படாமல்  அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
 
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்குகடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும்.
 
வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை,  தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.
 
மூக்கு: மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.
 
மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு  சீரான வாழ்க்கை இருக்கும். கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
 
நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக  பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது  3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.
 
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும்  குறுகலாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வரியம் பெருக செய்யும் பைரவர் வழிபாட்டை எவ்வாறு செய்வது...?