அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்வதால் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களை சேர்த்து கொள்ளலாம்.
ராசிப்படி தானத்தின் நன்மைகள்:
மேஷம் : சாம்பார் சாதம் தானம் செய்வது நல்லது.
ரிஷபம் : பால் மற்றும் பால் பொருட்கள் தானம் செய்வது நல்லது.
மிதுனம் : பச்சைக் காய்கறிகள் தானம் செய்வது நல்லது.
கடகம் : தயிர் சாதம் மற்றும் நீர்மோர் தானம் செய்வது நல்லது.
சிம்மம் : காய்கறி சாதம் தானம் செய்வது நல்லது.
கன்னி : தக்காளி சாதம் தானம் செய்வது நல்லது.
துலாம் : பேரிச்சை பழம் தானம் செய்வது நல்லது.
விருச்சிகம் : பழரசம் தானம் செய்வது நல்லது.
தனுசு : பானகம் தானம் செய்வது நல்லது.
மகரம் : நிலக்கடலை மற்றும் கிழங்குகள் தானம் செய்வது நல்லது.
கும்பம் : இளநீர் மற்றும் கனிகள் தானம் செய்வது நல்லது.