Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியனின் பிறப்பு பற்றி புராணக்கதைகள் கூறுவது என்ன...?

சூரியனின் பிறப்பு பற்றி புராணக்கதைகள் கூறுவது என்ன...?
சூரியனின் பிறப்பு குறித்து இரு வேறு கதைகளைப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார்.


திருமாலின்  ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.
 
அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. மார்க்கண்டேய புராணத்தில் இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. 
 
மற்றொரு புராணக்கதை: 
 
பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும்  மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.
 
உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக்கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள  ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார். அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (19-02-2021)!