Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதால் என்ன நன்மைகள் !!

வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதால் என்ன நன்மைகள் !!
வலம்புரி சங்கு என்பது தெய்வீகமானது. வலம்புரி சங்கால் இறைவனுக்கு பூஜை செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது. வலம்புரி சங்கில் நீர் எடுத்து அபிஷேகம் செய்யலாம்.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்றுதான் சங்கு என்பது ஐதீகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை ‘இடம்புரிச் சங்கு’. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும்.
 
சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை ‘இடம்புரிச் சங்கு’. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம் வகை, ‘வலம்புரி’. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மை பெறுகிறது. மூன்றாவது ‘சலஞ்சலம்’ சங்கு. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் சங்கு கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது ‘பாஞ்சஜன்யம்’. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும்.
 
வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு “லக்ஷ்மி சகோதராய” என்று அழைக்கப் படுகிறது. ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது மார்பிலும் தாங்கியபடி காட்சி அளிக்கிறார்.
 
வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதும் கோவிலில் பூஜை செய்வதும் மிக அருமையான முன்னேற்றங்களையும் செல்வ வளத்தையும் தரும்.
 
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமையான சோமவாரத்தில் 108 சங்கு வைத்து பூஜை செய்வார்கள் அதில் வலம்புரி சங்குதான் நடுநாயகமாக இடம்பெறும்.
 
வலம்புரி சங்கில் பூஜை செய்தால் தோஷங்கள் இருப்பின் அகன்று விடும். வலம்புரி சங்கை வாங்கும்போது நன்கு தெரிந்த ஆன்மிக பெரியவர்களை வைத்துதான் வாங்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை மாதம் ஐயப்ப சுவாமி வழிபாட்டின் சிறப்புக்கள் !!