Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லலிதாம்பிகையை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?

Advertiesment
லலிதாம்பிகையை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?
தமிழ் பாடல்கள், மகிஷாசூர மர்த்தி ஸ்லோகங்கள் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப ஸ்துதிகளை மேற்கொள்வர். இதில் மிக விசேஷமாக போற்றப்படும் ‘லலிதா சகஸ்ரநாமம்’ என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையாகும்.

வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார். இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க,  நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.
 
பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும். உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். 
 
சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.
 
லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். 
 
எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக்கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும்  உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகப்பெருமானை வணங்க உகந்த நாட்கள் என்ன...?