Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம நாமம் சொல்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?

ராம நாமம் சொல்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி பூஜையின் போது) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம். 'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும்  இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
 
எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய  கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
 
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி அதை உண்பவருக்கு தூய குணங்களையும், நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
 
வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
 
'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும்  அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்வில் திருப்பம் தரும் திருப்பட்டூர் கோவில்....!!