Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த ஹோமம் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்...?

எந்த ஹோமம் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்...?
பொதுவாகவே, பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை வேளையில் செய்யப்படும் எல்லாஹோமங்களும் விசேஷமானவை. கூடுதல் பலன்களைத்  தருபவை.

முக்கியமாக, ஹோமங்களை மதியம் 12 மணிக்குள் முடித்து விடுவதே உத்தமம். திருமணமானவர்கள், தம்பதிசமேதராக அமர்ந்து ஹோமங்களைச் செய்வது அதிக  பலன்களைத் தரும்.
 
அக்னியை தூதுவனாக பாவித்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு அவிர்பாகம் அனுப்பி அருள் பெறுவதே ஹோமம். இவற்றில் ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீசௌபாக்ய லட்சுமி ஹோமம். ஆகியவற்றை கண்டிப்பாக அதிகாலையில் செய்யவேண்டும். 
 
கணபதி ஹோமம் - எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புதுவேட்டில் குடிபுக. புது தொழில்தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.
 
சுதர்ஸன ஹோமம் - நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி கொள்ளவும்செய்யப்படுவது.
 
நவகிரக ஹோமம் - நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யப்படும் ஹோமம் இது.
 
லட்சுமி-குபேர-ஹோமம் - தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.
 
சரஸ்வதி ஹோமம் - கல்வி அறிவு பெருகச் செய்யப்படுவது.
 
சண்டி ஹோமம் - நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுவது.
 
ஆயுஷ்ய ஹோமம் - நீண்ட ஆயுள் வேண்டிச் செய்வது.
 
தன்வந்திரி ஹோமம் - நோயற்ற வாழ்வு பெற செய்யப்படும் ஹோமம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது சிறந்தது...?