Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சில தெரிந்துக்கொள்ளவேண்டிய பூஜை முறைகள் என்ன...?

Advertiesment
சில தெரிந்துக்கொள்ளவேண்டிய பூஜை முறைகள் என்ன...?
பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, தூபமாக இருந்தாலும் சரி அதை வலமாகத்தான் சுற்றி பூஜை செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக குல தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.

நெய் தீபம் ஏற்றி அதனை நம் கைகளால் எடுத்து இறைவனை நோக்கி மூன்று முறை வலப்புறமாக சுற்ற வேண்டும். இப்படி நாம் செய்யும் பொழுது இறைவனை மனதார நினைத்து கொள்ள வேண்டும். தூபம் காட்டிய பிறகு தீபம் கட்டாயமாக காட்டப்பட வேண்டும்.
 
நிவேதனம்: நைய்வேத்யம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றுள் உங்களால் எது முடியுமோ அதனை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு நைவேத்தியம்  செய்யலாம். 
 
பூஜை அறையில் படங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நைவேத்யம் வைக்க வேண்டும். நாம் இறைவனுக்கு நைவேத்யத்தை, பூவினால் ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து அந்த நைவேதியத்தை மூன்று முறை சுற்றி அதற்கான மந்திரம் கூறி இறைவனுக்கு  சமர்ப்பிக்க வேண்டும்.
 
சிலர் வீடுகளில் கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இருக்காது. கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இல்லாதவர்கள் நெய்தீப ஆரத்தி காட்டுவதுடன் பூஜையை முடித்துக் கொள்ளலாம். 
 
பூஜை முடியும் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை நீங்கள் இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம். தீப ஆராதனையை நம் கைகளால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். கடைசியாக சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்காபிஷேகம் எவ்வாறு எப்போது செய்யப்படுகிறது....?