Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவகிரக தோஷங்களை போக்கும் சில பொதுவான பரிகாரங்கள் என்ன...?

நவகிரக தோஷங்களை போக்கும் சில பொதுவான பரிகாரங்கள் என்ன...?
, திங்கள், 24 ஜனவரி 2022 (15:24 IST)
காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.


நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும். தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

பவள ரத்தினத்தை அணிவது செவ்வாய் கிரகத்தின் நேர்மறையான முடிவுகளைத் தருகிறது. இந்த ரத்தினம் மேஷம் மற்றும் விருச்சிக மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும். இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும். 16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது. வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும். சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!