Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குல தெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் வழி...!

Advertiesment
குல தெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் வழி...!
மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு  வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.
வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் - இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு பன்னீர் எந்த அளவோ  அதே அளவு தண்ணீர் ஊற்றி, கலச சொம்பை சுற்றி நூல் சுற்ற தெரிந்தவர்கள் சுற்றலாம். நூல் சுற்ற தெரியாதவர்கள் பட்டு துணியை சுற்றி விடலாம்.
 
பூஜையறையில் ஒரு பலகையை வைத்து, அதில் வாழை இலை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதன் மேல் கலச செம்பை வைத்து அதன்மேல் வாழைப்பூவை  வைத்து (நுனி பகுதி மேல் நோக்கி இருக்க வேண்டும்.) வாழைப்பூவுக்கும் கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைத்து அதன்மேல்  வாழைப்பூவை வைக்கவும்.
 
வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ அர்ச்சனை செய்யவும். வாழைப்பூ மூன்று நாட்கள் வரை தாங்கும். பூஜை மூன்று நாட்களே போதும். மேலும் தொடர்ந்து  செய்ய விரும்புவர்கள் வாழைப்பூவை மட்டும் மாற்றினால் போதுமானது. பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும்  அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். கலசத்தில் உளளவற்றை வீட்டில் தெளித்துவிட்டும், குளிக்கும் தண்ணீரில் விட்டு குளித்துவிடவும்.
 
பூஜைக்குறிய மந்திரம்:
 
ஓம் பவாய நம ஓம் சர்வாய நம ஓம்
ருத்ராய நம ஓம் பசுபதே நம ஓம் உக்ராய நம
ஓம் மஹாதேவாய நம ஓம் பீமாய நம ஓம்
ஈசாய நம
 
தினமும் 108 தடவை காலையும் மாலையும் கூறி, பூஜை செய்து வந்தால், நாம் எண்ணியதை நம் குலதெய்வம் நிறைவேற்றி வைப்பார்கள் என்பது நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உப்பை பயன்படுத்தி வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை நீக்க....!