Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் வெண்கடுகு சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் பலன்கள்....!

Advertiesment
வீட்டில் வெண்கடுகு சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் பலன்கள்....!
வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை, வேப்ப இலை இவைகளை நன்றாக காயவைத்து தூளாக்கி சம்பிராணியுடன் கலந்து வீட்டில் அடிக்கடி தூபம் போட வேண்டும். இந்த கலவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும்  வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது.
 
மேற்கண்ட பொருட்களை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள். இப்படி செய்யும் பொழுது வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை  சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படும்.
 
ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். 
webdunia
வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும். வீண் சண்டை, அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவை அகலும். நோய் தொல்லை நீங்கும் எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
 
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும்  விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (28-02-2020)!