Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைரவரின் பூஜைக்கு உகந்த வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு !!

பைரவரின் பூஜைக்கு உகந்த வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு !!
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவர் காயத்ரி:
 
சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்
 
பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். 
 
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11  பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
 
புதன்கிழமை அன்று ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
 
புதன்கிழமை மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவலிங்க பூஜைக்கு ஏற்ற மகத்துவம் நிறைந்த நாகலிங்கப்பூ !!