Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணம் பல வழிகளில் நம்மை வந்து சேர இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் !!

Advertiesment
பணம் பல வழிகளில் நம்மை வந்து சேர இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் !!
நமக்கு வரும் பண கஷ்டங்கள், தடைகள், அனைத்தும் நம்மை விட்டு விலக பணம் பல வழிகளில் நம் கையை வந்து சேர வெந்தயத்தை வைத்து, புதன் பகவானை நினைத்து செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

புதன்கிழமை அதிகாலை வேளையிலேயே 6 மணிக்கு முன்பு எழுந்து சுத்தமாக குளித்து, காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய வெள்ளைத் துணியில், ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை வைத்து சிறிய முடிச்சாக கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். 
 
தீபம் ஒன்றை ஏற்றி, பூஜை அறையில் ஒரு பாயை விரித்து அதன் மீது அமர்ந்து நீங்கள் முடிந்த முடிச்சை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனையை அந்த இறைவனிடம், குலதெய்வத்திடம் வாய்விட்டு சொல்ல வேண்டும்.
 
பணம் பல வழிகளில் என் கைக்கு வரவேண்டும், வியாபாரத்தில் முன்னுக்கு வர வேண்டும், செய்யும் தொழில் வெற்றி அடைய வேண்டும். செய்யும் வேலையில் வருமானம் நிறைய கிடைக்க வேண்டும் என்ற எப்படிப்பட்ட கோரிக்கை வைக்கலாம்.
 
7 மணிக்குள் உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு கையில் இருக்கும் முடிச்சை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். தினமும் தீபம் ஏற்றும் போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும்.
 
தினமும் உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால், வாரம் ஒருமுறை வரக்கூடிய புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, முடிந்து வைத்திருக்கும் வெந்தயத்தை ஓடுகின்ற தண்ணீரில் கொட்டி விடலாம். இல்லை என்றால், செடிகொடிகள் இருக்கும் இடத்தில் இந்த வெந்தயத்தை போட்டு விடுங்கள் அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் பண தரித்திரம் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைகளில் வாசற்படி மற்றும் கதவுகள் எங்கு எந்த திசையில் அமைப்பது நல்லது...?