Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுமனுக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா...?

Advertiesment
அனுமனுக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா...?
ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்தபோது சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் அனுமன். அங்கு மரத்தடியில் அமர்ந்த இருந்த சீதா  பிராட்டியை நோக்கினார்.
முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின் அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தை பார்த்தபோது அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.
 
அம்மா நெற்றியில் ஏன் குங்குமத்திற்கு பதிலாக செந்தூரம் உள்ளது என ஹனுமான கேட்க, அதற்கு சீத பிராட்டி மைந்தா, என் அன்பான  கணவரின் நினைவு மட்டும் தான். எப்போதும் என்னுடன் இருக்கவேண்டும் என நினைத்தே செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.
 
ஏனெனில் தூய்மையான செந்தூரத்தை எத்தனை முறை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும் அது போலத்தான் என்னிடம் இருந்து கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே அதை இட்டுக் கொண்டேன் என்றாராம்  சீதாபிராட்டி.
 
அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய் ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம். அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுவது  வழக்கத்தில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்டாளுக்குச் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்ற பெயர் எவ்வாறு உருவானது...?