Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருஷ்டி தோஷங்கள் மற்றும் எதிர்வினைகளை விரட்டும் ஆகாச கருடன்...!

திருஷ்டி தோஷங்கள் மற்றும் எதிர்வினைகளை விரட்டும் ஆகாச கருடன்...!
கண் திருஷ்டியை போக்கும் சக்தி வாய்ந்தது ஆகாச கருடன் கிழங்கு. சமீபகாலமாக, சாதாரண வீடுகளில் கூட, வாஸ்து பார்ப்பது அதிகரித்து வருகிறது. கண் திருஷ்டி போக்கிடவும் ஏதாவது ஒரு பரிகாரங்களையோ அல்லது பரிகார பொருட்களையோ பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, ஆகாச கருடன் கிழங்கை  வீடுகளில் கட்டும் பழக்கம் அதிகரித்துள்ளது.
ஆகாச கருடன் கிழங்கு, மலைப்பகுதியில் வளரக்கூடிய கொடி இனம். இதற்கு பேய்சீந்தில், கொல்லன் கோவை என்ற பெயர்களும் உள்ளன. இதை வீடுகளில்  கயிற்றால் கட்டி தொங்க விட்டால், திருஷ்டி தோஷங்கள், எதிரிகளால் பில்லி, சூனியம் உள்ளிட்ட எதிர்வினைகளை ஈர்த்துக்கொண்டு தன்னை தானே அழித்துக்கொள்ளும். அதேபோல, வீடுகளில் நல்ல சக்திகள் இருக்கும் பட்சத்தில், கிழங்கிலிருந்து பச்சை பசேலென பசுமையான கொடிகள், நன்கு வளர்ந்து  காட்சியளிக்கும்.
 
சிறிய ரக கிழங்கு 50க்கும், பெரிய ரக கிழங்கு அதிகபட்சமாக, 100 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். கருடன் கிழங்கிலிருந்து வெளிப்படும், ஒரு வித மணம் பெரும்பாலும் வீட்டின் சுற்றுப்புறங்களில் பாம்புகளை அண்ட விடாது. அதேபோல, எலுமிச்சம் பழம் அளவிற்கு, கிழங்கை துண்டு செய்து சாப்பிட்டால், பாம்பு  விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது.
webdunia
இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. இது அதிக கசப்பு சுவை கொண்டது. பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும்,  மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும். ஆனால் இவற்றை சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனீஸ்வரனுக்கு எள் கோண்டு தீபமேற்றுவது என்பது சரியா?