Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யம் பெருக நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய தீர்த்தம் !!

Webdunia
இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம் செய்முறை: ஏலம் - 20 கிராம், இலவங்கம் - 20 கிராம், வால்மிளகு - 20 கிராம், ஜாதிப்பத்திரி - 20 கிராம், பச்சைக் கற்பூரம் - 5 கிராம். குறிப்பாக,  முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும் பச்சை கற்பூரம் கால் பங்கும் எடுத்துகொள்ளவும்.
 
முதலில் முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும்.
இதனை கண்ணாடி பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.
 
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி (மூன்று விரல் அளவு) அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை  வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் தீர்த்தமாக அருந்திவர சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
 
சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
 
பயன்கள்: இதனால் இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும். நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும்.  பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம்  பெருகும். இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருத்துவ முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments