Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாராகி பக்தர்களை சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏன் தெரியுமா...?

வாராகி பக்தர்களை சனிபகவான் நெறுங்குவதே கிடையாது ஏன் தெரியுமா...?
அன்னை மஹா வாராஹி சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும்  வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.
 


ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது  எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் “எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டு
 
ஜோதிடத்தில் இரவுக்கு அதிபதி சனி- கருப்பு இருட்டு, புதர், எல்லாம் சனி ஆதிக்கம் செய்யும் இடமாகும். நவகிரகங்களிலே இவர் ‘கர்மகாரகன்’ என்று  அழைக்கப்படுகிறான். நீதிமான் இவனே, செய்த தவறுக்கு பாரபச்சமின்றி தண்டனை வழங்குபவன். மக்கள் அலறி ஓடுவது எல்லாம்  என்ற இவர் காலம் வரும்  போது தான். இவர் பார்வையில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் யாரும் தப்ப இயலாது. 
 
ஒருவனை கோட்டையிலிருந்து குடிசைக்கு கொண்டு வரும் பார்வை வலிமை சனிபகவானுக்கு உரியது. ஈசன் முதல் சகல தேவர்களையும் ஆட்டி வைத்த வரலாறு  இவருக்கு உண்டு. இவர் கட்டுப்பட்டு நிற்கும் ஒரே கடவுள் வாராகி மட்டுமே. 
 
வாராகி பக்தனை ஒரு போதும் சனிபகவான் நெறுங்குவதே கிடையாது. ஏனெனில் கரிய நிறம், எருமை, இதன் எல்லாம் சனி ஆதிக்கம், ஆகவே இவர்  ‘ஆயுள்காரகன்” என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணத்தினாலே ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மன் எருமையை வாகனமாக வைத்துள்ளார்.

இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள் இந்த வாராகி, தேவர் மூவர் யாவரும் அடிபணிந்து வணங்க தக்க தெய்வ வடிவானவள் இவளை வணங்கும்  யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார் என்பது முற்றிலும் உண்மை. எனவே இரவு நேர பூஜையில் வராகி தேவியை வழிபட்டு வாழ்வில் அனைத்து  துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்ட அன்னை மஹா வாராஹி !!