ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்து போபுரத்தை வணங்கி செல்வதை காணமுடியும். கோபுங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலகாலமாய் இருந்து வருகிறது.
சிற்ப சாஸ்திரத்தின்படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம் என்பர்.