Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!

சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
சபரிமலையில் இருகரத்தனாய்ச் சின்முத்திரை பாலித்து யோக நிலையில் அமருவதற்கு முன்பு, ஐயன் தன் 18 ஆயுதங்களைப் பதினெட்டுப் படிகளோடு ஐக்கியமாகும்படி செய்தாராம். இப்பதினெட்டுப் படிகளேறி ஐயனைத் தரிசிக்கும் அன்பர்களை அவன் தன் பதினெட்டு ஆயுதங்களும் சூழ்ந்து எவ்வித ஆபத்தும்  வராமல் காக்கும்.
ஐயனைச் சூழ்ந்திருக்கும் பதினெட்டு மலைகளையும், பதினெட்டுப் படிகள் பற்றிய தத்துவங்கள்:
 
1. சபரி மலை, 2. பொன்னம்பல மேடு, 3. கவுண்ட மலை, 4. நாக மலை, 5. சுந்தர மலை, 6. சிற்றம்பல மேடு, 7. கல்கி மலை, 8. மாதங்க மலை, 9. மைலாடும்  மலை, 10. ஸ்ரீ மாத மலை, 11. தேவர் மலை, 12. நீலக்கல் மலை, 13. தலப்பாறை மலை, 14. நீலி மலை, 15. கரி மலை, 16. புதுச்சேரி, 17. அப்பாச்சி மேடு, 18.  இஞ்சிப் பாறை.
 
நவக்கிரகங்களும் அவற்றின் அதிதேவதைகளுமாகப் பதினெட்டுத் தேவதைகள் (கிரகங்கள் 9 + அதிதேவதைகள் 9 = 18) இப்படிகளில் வீற்றிருந்து படியேறிவரும் பக்தர்களின் கிரஹ தோஷங்களைப் போக்குகிறார்கள்.
webdunia
பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, அன்னமயகோசம் முதலான கோசங்கள் 5, மற்றும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் 3 ஆகியவற்றைக் கடந்து உள்ளுறையும் ஆத்மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (20-06-2018)!