Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகு பகவானின் பரிபூரண அருளை பெற உதவும் மந்திரம் !!

Webdunia
பஞ்சமி திதி விசேஷமானது. அதிலும், தேய்பிறையில் வரும் பஞ்சமி திதி கூடுதல் விசேஷம். தேய்பிறையில் வரும் பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக  தேவதைகளையும், ராகு பகவானையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.

நல்ல காரியங்களை ராகு காலத்தில் செய்யக்கூடாதா ஏன்
ஜோதிட சாஸ்திர படி ராகுவும் கேதுவும்  மற்ற கிரகங்களில் இருந்து வேறுபட்டு, நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் அமர்கின்றன. 
 
ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் பல சிக்கல்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் துன்பத்தின் உச்சத்திற்கு செல்வார்கள். அதே போல ஒருவரது  ஜாதகத்தில் ராகு சிறப்பான இடத்தில் அமைந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழலாம். இதனாலேயே ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும்  இல்லை என்று சொல்கிறார்கள்.
 
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். 
 
விரதம் இருக்க இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
 
ராகு காயத்ரி மந்திரம்:
 
ஓம் நாகத்வஜாய வித்மஹே 
பத்ம அஸ்தாய தீமஹி 
தன்னோ ராகு ப்ரசோதயாத்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments