Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தவர்கள் அடிக்கடி கனவில் தோன்றினால் கெடுதல் ஏற்படுமா...?

Webdunia
நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று கூறப்படுகிறது.  
நமது கனவில் அடிக்கடி நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள் அல்லது தாத்தா, பாட்டி என சில நேரங்களில் நமது கனவில் வருவதுண்டு. அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி  நம்மை ஒருவித பயம் கொள்ள செய்யும். எனவே இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். 
 
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.  குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். 
 
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை  மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். 
 
வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத்  தேவையில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments