Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாசி மகம் கொண்டாடப்படுவதன் பின் உள்ள புராண கதை

மாசி மகம் கொண்டாடப்படுவதன் பின் உள்ள புராண கதை
வல்லாளர் என்பவர் திருவண்ணாமலையில் அரசாண்டு வந்தார். குழந்தை இல்லாத அவர் முன், எம்பெருமானாம் சிவன் ஒரு பாலகனாகத் தோன்றி, அவர் இறக்கும் தருவாயில், அவர்தம் ஈமச் சடங்குகளைச் செய்வதாக வாக்களித்தார். 
அவ்வாறே, அந்த அரசர் இறந்த அன்று, சிவ பெருமான் அவரின் ஈமச் சடங்குகளை செய்ததாகப் புராணம் கூறுகிறது. இன்று கூட, மாசி மகம் அன்று, சிவ பெருமான் பூமிக்கு வந்து, அந்த அரசருக்கு உரிய சடங்குகளைச் செய்வதாகக் கருதப்படுகிறது. 
 
மாசிமகத்தைப் பற்றி மற்றுமொரு புராணக் குறிப்புண்டு. எம்பெருமான் சிவனார் உலகத்தை அழித்து மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதை உணர்ந்த பிரம்மா, அவரிடம் மீண்டும் உலகத்தை உருவாக்குவது எப்படி எனக் கேட்டார். சிவனும், பிரம்மாவிடம், ஒரு கும்பத்தில் அம்ருதத்தை நிரப்பி, அதை மேரு மலையின்  உச்சியில் வைக்கக்கூறினார். 
 
பிரளயத்திற்குப் பிறகு,  உலகம் அழிந்த நிலையில், மீண்டும் அதனை உருவாக்க, அந்த அம்ருத கலசத்தை வைத்த இடத்திலிருந்து உபயோகிக்கக் கூறினார். பிரம்மாவும் அப்படியே செய்தார். இது நடந்த தினம் மாசி மகம். ஆம், பிரம்மா மாசி மாதத்தில், மக நக்ஷத்திரம் தோன்றிய அன்றே உலகை உருவாக்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குனி மாதத்தில் கிரஹ பிரவேசம் செய்வதில்லை ஏன் தெரியுமா...?