Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்...!!

Advertiesment
பிரம்ம முகூர்த்த வேளையில் வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்...!!
பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை பொழுது 3:30 am முதல் 6:00 am வரையாகும். இந்த நேரத்தில் எழுந்து படித்தால், அவை மனதில்  பதியும் என்பது உறுதி.
பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் படுக்கையை விட்டு எழுந்துவிடுவது நல்லது என்பதற்கு இன்னொரு காரணம், பிரம்ம முகூர்த்த நேரத்தில்தான் தேவர்களும் பித்ருக்களும் நம் இல்லங்களுக்கு வருவார்கள் என்பதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் நாம் தூங்கிக்  கொண்டிருந்தால் வரவேற்காமல் இருக்கிறார்களே என்று அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்களாம்.
 
எனவே தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டுக்கொண்டு வாசல் கதவை திறந்து இறைவனை வேண்டி வணங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிட்டு சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாக விளக்கேற்றி வழிபடவேண்டும்.
 
காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும். மேலும் வீட்டில் அதுவரை இருந்த கஷ்டநிலை மற்றும் கடன் தொல்லையெல்லாம் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-10-2019)!