Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்....!

Advertiesment
காயத்ரி மந்திரத்தை சொல்வதால் கிடைக்கும் பலன்கள்....!
'வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும். இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். 
இவர் காயத்தையே(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர்.
 
மந்திரம்: 
 
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
 
காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்
 
காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்ரர் ஆவார். அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக்  கண்டறிந்தார். அவர் பிராமணர் அல்ல. (இதன் மூலம் ஜாதிப்பாகுபாடு புராதன காலத்தில் இல்லை எனத் தெரிகிறது).அவர் ஒரு க்ஷத்திரியர்.ஆனால் இன்று மூன்று வேளைகளிலும்(காலை, மதியம், மாலை) சந்தியாவந்தனம் செய்துவரும் பிராமணர்கள் ஜபிப்பது காயத்ரி மந்திரத்தைத் தான்.
webdunia
காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து ஆசைகளும் உறுதியாக நிறைவேறும். தினமும் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர்களுக்கு ஆத்மசுத்தி  கிடைக்கும்.அவர்கள் இவ்வுலகில் வாழும் வரையிலும் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள். காயத்ரிமந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும்,  உள்ளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும். காயத்ரிமந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பின் தினமும் ஜபிக்கச் சிறந்ததாகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும்,  அஷ்டமாசித்திகளும் காயத்ரிதேவியை வழிபட்டால் கைகூடும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவமாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து : ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை