Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் தடுக்கும் ஸ்வஸ்திக் !!

வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் தடுக்கும் ஸ்வஸ்திக் !!
விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் இருக்கிறது. எந்த காரியத்தையும் தொடங்கும்முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. அவர் கைகளில் இருப்பதே இந்த ஸ்வஸ்திக் சின்னம். அதனாலேயே இது வெற்றியின் சின்னமாகிவிட்டது.

விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் இருக்கிறது. எந்த காரியத்தையும் தொடங்கும்முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. அவர் கைகளில் இருப்பதே இந்த ஸ்வஸ்திக் சின்னம். அதனாலேயே இது வெற்றியின் சின்னமாகிவிட்டது.
 
செங்கோண வடிவில் மேலிருந்து  கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதனை பூஜையறை வாசலில்  கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு. "ஸ்வஸ்திக்" என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள். வெற்றியைத்  தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். 
 
இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவரின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது. 
 
விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் இருக்கிறது. எந்த காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வணங்குவது நமது மரபு. அவர் கைகளில்  இருப்பதே இந்த ஸ்வஸ்திக் சின்னம். அதனாலேயே இது வெற்றியின் சின்னமாகிவிட்டது.
 
ஸ்வஸ்திக் உணர்த்துவது: நான்கு வேதமங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வண நான்கு திசைகள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நான்கு யுகங்கள் - சத்ய, த்ரேதா, துலாபார, கலியுகம் நான்கு ஜாதிகள் - பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர நான்கு யோகங்கள் - ஞான, பக்தி, கர்ம, ராஜ நான்கு மூலங்கள் - ஆகாயம், வாயு, நீர்,  நிலம் வாழ்க்கையின் நான்கு பருவங்கள் - குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி ஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின்  உள்பக்கமோ, வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும். இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில்  போடுவது நன்மை உண்டாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனிச்சிறப்பு கொண்ட ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள்...!!