Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்...!

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்...!
நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம  கல்வி.
நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே  போதும், நீயே மெத்தபடித்தவனாக இருப்பாய்.
 
வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின்ம மனநிலை நமக்குத் தேவையே இல்லை. மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
 
கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது. அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும்  கொண்டுவரும்.
 
துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம்  செய்யக்கூடாது.
 
வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள்  உணர வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குண்டலினி சக்தி: உடலில் உள்ள ஆற்றல் மையங்கள்தான் ஏழு சக்கரங்கள்...!