நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக்குழிக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்கக் கூடாது. அது எப்போதும் கழுத்தில் இருக்கலாம்.
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
ருத்திராட்சம், துளசி மணி, ஸ்படிகம் போன்ர மாலைகளை ஜபம் ஹோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணியக் கூடாது.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.
கோயிலுக்குச் செல்லும் போதும் பூஜை செய்யும் போதும் பெண்கள் முடியை தொங்கவிடாமல் நுனி முடிச்சுப் போடவேண்டும்.
பஞ்சாங்கம் என்பதன் பொருள் - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், காரணம் எனும் ஐந்து அங்கங்களைக் கொண்டதால் பஞ்சாங்கம்.
பூஜை செய்யும்போது பூத்தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது. வெறுங்கையில் பூப்பறித்து வந்து அதை இறைவனுக்கு பூஜை செய்யக்கூடாது.
வீட்டில் சாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. விரலால் பால் தொட்டு வைத்தோ, குங்குமம் வைத்தோ, பூவாலோ அமர்த்தலாம். ஆண்கள் அணைப்பது மத்திமம்.
துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை பெளர்ணமி, துவாதசி சாயங்காலம், இரவு நேரம் பறிக்கக் கூடாது.