Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஹா பெரியவா அற்புத அருள்வாக்குகளில் சில...!!

Advertiesment
மஹா பெரியவா அற்புத அருள்வாக்குகளில் சில...!!
பெண்கள் வேலையை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தர்ம சாஸ்திரங்கள், நீதிநூல்கள், புராணங்கள் போன்ற நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.

பெண்கள் குழுவாக இணைந்து படிப்பது சிறப்பு. அதற்காக சங்கம் அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
 
பூஜைக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், அட்சதை போன்றவற்றைச் செய்து கோயில்களுக்குக் கொடுப்பது நல்ல சிறந்த தொண்டு.
 
ஆடம்பர ஆசைகளை வளர்க்காமல் எளிமையாக வாழ்வதில் மகிழ்ச்சி அடைய வேண்டும்.                       
 
கடவுள் இரு கைகளைக் கொடுத்திருக்கிறார். ஒரு கையால் ஈஸ்வரன் காலைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கடமையைச் செய்யுங்கள்.
 
பணத்திற்காக அலைந்து கொண்டிருப்பவனுக்கு கடவுளைச் சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.
 
ஒரு சிறுபுல்லைக் கூட நம்மால் சிருஷ்டிக்க முடியாது. ஆனால், கடவுள் பரந்த இந்த உலகத்தையே நமக்காகப் படைத்திருக்கிறார்.
 
எமன் மனிதனின் உயிரை எப்போதும் பறித்து விடலாம். அதனால், தர்மம் செய்வதில் கால தாமதம் கூடாது.
 
சேவை செய்ய விரும்புபவர்களுக்கு, மனதில் அமைதியும், இதழில் புன்னகையும் எப்போதும் அவசியம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவனை வழிபட ஏற்ற பிரதோஷ வேளை ஏன் தெரியுமா...?