Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாபங்கள் விலக எளிய பரிகாரங்கள்....!

Advertiesment
சாபங்கள் விலக எளிய பரிகாரங்கள்....!
எதனால் சாபம் உள்ளது என சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் எந்த சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியும். அதனைக் கண்டறிந்து  அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற இயலும்.

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்.
 
பெற்றோர்களால் ஏற்படும் சாபங்கள் விலக பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். அவர் எப்பொழுதும் தியானத்தில்  இருப்பவர் என்பதால் அதற்கு முன்னறிவிப்பாக மூன்றுமுறை அவரது சன்னிதியில் மெதுவாகக் கைதட்டி அதன்பிறகு தகவலை எடுத்துரைத்துப் பிறகு  அபிஷேகம் செய்வது நல்லது.
 
சகோதர சாபம் விலக அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் விமோசனம் பெற இயலும்.
 
சுமங்கலி சாபம் விலக அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். இதுபோன்று மற்ற சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைச்  செய்தால் நிச்சயமாக சாப விமோசனத்தை நாம் பெற இயலும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனிப் பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க சனீஸ்வர காயத்ரி மந்திரம்..!