Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனியினால் உண்டான தோஷங்களையும் கெடு பலன்களையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் !!

Advertiesment
சனியினால் உண்டான தோஷங்களையும் கெடு பலன்களையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் !!
சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும்.


மனதார  வேண்டி, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று மரத்தடி விநாயகர் அல்லது தெருமுனை விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மூன்று முறை  வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிடுங்கள்.
 
அந்த பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசிப் பொடியை, எறும்புகள் முழுவதுமாக சாப்பிட்டு தீர்த்துவிடாது. மழைக்காலத்திற்கு உணவு வேண்டுமே என்று தன் புற்றுக்குள் சேமித்துவைத்துக் கொள்ளும்.
 
இப்படி எறும்புகள் எடுத்து வந்த பொடியை, புற்றுக்குள் இருக்கும் பொடியை, இரண்டே கால் வருடங்களாக இருக்கும் பொடியை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்போது அரிசிப் பொடியின் குணமும் மாறிவிடும். இதனால்தான்,  எறும்புக்கு அடிக்கடி பச்சரிசி பொடி இடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
 
பலன்கள்: ஒரேயொரு எறும்பு நாம் இடுகிற ஒரேயொரு துளி பச்சரிசிப் பொடியைச் சாப்பிட்டால், அது நூறு அந்தணர்களுக்கு உணவிட்டதற்குச் சமம். 
 
மேலும் சனி பகவானின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலான சனிதோஷமும் பெரிய  தாக்கத்தையோ கெடு பலனையோ உண்டாக்காது. அதனால்தான், அரிசிமாவில் கோலமிடுவது வழக்கமாகவே இருக்கிறது. அந்த அரிசிமாவு எறும்புக்கும்  பூச்சிகளுக்கும் உணவாகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பண்டிகை பற்றி கூறப்படும் புராணக்கதைகள் பற்றி தெரியுமா...?