தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்:
17-09-2023 அன்று சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-09-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-09-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நேர்மையாகவே அனைத்து காரியங்களையும் சாதித்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் சோம்பலை ஒதுக்கி விடுவது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.
தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும்.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.
மூலம்:
இந்த மாதம் உங்களின் மனதிடம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். ஆரம்பரச் செலவை குறைக்கவும். அவ்வப்போது ஒருவித சோர்வு ஏற்படலாம். அதை தகுந்த நபர்களிடம் திட்டமிட்டு சரிசெய்யவும். எந்தப் பிரச்சனையானாலும் பொறுமையுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்படுங்கள்.
பூராடம்:
இந்த மாதம் அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனகவலை அகலும். யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும்.
உத்திராடம்:
இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நன்மை ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5