Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுயநலமற்ற தன்மையே கடவுள்: விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்

சுயநலமற்ற தன்மையே கடவுள்: விவேகானந்தரின் ஆன்மிக துளிகள்
முதலில் உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அதன்பிறகு, ஆண்டவனை நம்புங்கள்.உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு  உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால், இதயத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.
 
அனைத்திலும் இறைவனைக் காண்பது நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
 
ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள். சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
 
உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் கடவுள் முருகனின் ஆறு முகங்கள்