Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

Advertiesment
சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!
சரஸ்வதி பூஜை அன்று நம் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுத்தப்படுத்த வேண்டும்.


வீட்டை நன்கு சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.
 
பின் வீட்டின் வாயிலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மாவிலை, தோரணம் கட்டி சரஸ்வதி தேவியை வரவேற்க வேண்டும். நம் வாகனங்களை சுத்தம் செய்து அவற்றிற்கும் பொட்டு வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும்.
 
பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதிர்க்கு முன் முழுமுதர்க் கடவுளான வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
 
பூஜை அறையில் முதலில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். குழந்தைகள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு  உதவும் ஆயுதங்கள், இயந்திரங்கள், இதர உபகரணங்களையும்  சிறப்பிக்க அவற்றை இறைவனடியில் வைத்து வழிபாடு செய்வதே ஆயுதபூஜையாகும்.
 
ஆயுத பூஜை அன்று சிறிய குடிசை தொழில் முதல் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து இடத்திலும் தாங்கள் உபயோகபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் தொழில் கருவிகளை சுத்தம் செய்து, பின் அவற்றிற்கு சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து, பூ வைக்க வேண்டும். சரஸ்வதி தேவியின் படத்திற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.
 
பின்னர் நெய்வேத்தியம் செய்வதற்காக செய்யப்பட அனைத்தையும் ஒரு வாழை இலையில் வைக்க வேண்டும். முக்கியமாக பொரி கடலை, அவல். வடை, பாயாசம், பழங்கள் போன்றவையும் படையலில் இடம் பெற வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-10-2021)!