நவகிரகங்களில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக வருபவர் தான் சனி பகவான். இவர் நமது வாழ்க்கையில் உள்ள இன்பம் மற்றும் துன்ப ங்களை அவரவரின் கர்ம வினைக்கு ஏற்ப வழங்கக்கூடியவர்.
சனி பகவான் நமக்கு எவ்வளவு துன்பம் அளிக் கிறாரோ அந்த அளவிற்கு இன்பங்களையும் கொடுக்கக்கூடியவர். சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும். காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினை களின் வீரியம் குறையும்.
கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும். பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.
சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்யில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்னர் சனி பகவானின் கவசத்தை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிக்கும் ஆற்றலைச் சனிபகவான் வழங்குவார்.
சனி பகவான் கவசம்:
ஓம் ஸ்ரீ காகத் வஜாய வித்மஹேம்
கட்க ஹஸ்தாய தீம் மஹீம்
தந்தோம் மந்த ப்ரோஸதயாத்.