Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

பங்குனி உத்திர நாளில் எந்தெந்த தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றது தெரியுமா...?

Advertiesment
பங்குனி உத்திரம்
தமிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம். உத்திர நட்சத்திரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது நம் வழக்கம். 

பல தெய்வத் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன ஞானநூல்கள். சிவ - சக்தி; ஶ்ரீராமர் - சீதை; முருகப் பெருமான் -  தெய்வானை; ஆண்டாள் - ரங்கமன்னார்; அகத்தியர் - லோபாமுத்திரை, ரதி - மன்மதன், இந்திரன் - இந்திராணி, நந்தி - சுயசை, சாஸ்தா - பூரணை, புஷ்கலை,  சந்திரன் - 27 நட்சத்திர மங்கையர் என அனைத்துத் திருமணங்களும் பங்குனி உத்திர நன்னாளில்தான் நடைபெற்றன.
 
பங்குனி உத்திர நாளில், 'கல்யாணசுந்தர விரதம்' இருந்து வழிபட்டால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களில் வழிபாடு செய்து, புதுத்தாலியை கட்டிக்கொள்வது சுமங்கலிகளின் வழக்கம். 
 
சிவபெருமான் அம்பாளைக் கரம்பிடித்த நன்னாளில், பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக சிவனடியார்கள், 'கல்யாணசுந்தர விரதம்' அனுஷ்டிப்பார்கள். 
 
இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருநாளில் விரதமிருந்து  வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குனி உத்திர விரதத்தை கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!