திருமூலருக்கு குருவாக விளங்கிய நந்திதேவர்!

வியாழன், 25 ஜனவரி 2018 (15:19 IST)
நந்திகேசுவரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எப்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது  புராண மரபு.
சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த  வரமாகும்.
 
சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தலம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போது. அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
 
நந்தியை வழிபடும்போது, சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக என்று பிரார்த்திக்க வேண்டும்.
 
நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
 
பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விவேகானந்தர் ஆன்மிக சிந்தனை துளிகள்...!