Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

Advertiesment
Monthly astro

Prasanth Karthick

, புதன், 1 மே 2024 (06:26 IST)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:
01-05-2024 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
07-05-2024 அன்று புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-05-2024 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-05-2024 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-05-2024 அன்று புதன் பகவான்  ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-05-2024 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நேரத்தை சரியாக பயன்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம்  எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பெண்களுக்கு உதவி கேட்டு வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம்.

கலைத்துறையினருக்கு நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். விளையாடும் போது கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்

அனுஷம்:
இந்த மாதம் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.  பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம்.

கேட்டை:
இந்த மாதம்  வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 05, 06

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – துலாம்!