Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத ராசிப் பலன்கள் - ரிஷபம்

Advertiesment
மார்ச் மாத ராசிப் பலன்கள் - ரிஷபம்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (22:53 IST)
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்துக் காட்டுபவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

ஆரோக்யம், அழகுக் கூடும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விலை உயர்ந்த மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களின் சுகாதிபதியான சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் புது வேலைக் கிடைக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

9-ந் தேதி வரை குரு 6-ல் மறைந்துக் கிடப்பதால் நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள்.

10-ந் தேதி முதல் குருபகவான் 7-ல் அமர்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்களும் விரும்பி வந்துப் பேசுவார்கள்.

நிழல் கிரகமான ராகு, கேது மற்றும் ராஜ கிரகமான சனியின் போக்கு சரியில்லாததால் வேலைச்சுமையால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லைகளும் வந்து நீங்கும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்லதல்ல. பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! அழகுக் கூடும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வேலையாட்களால் சின்ன சின்ன பிரச்னைகள் வெடிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொல்லை கொடுத்து வந்த ஒரு அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களால் மனஇறுக்கம் வரும். அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! வெளியிடப்பட முடியாமல் இருந்து வந்த உங்களுடைய படைப்புகளை இந்த மாதத்தில் வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், புதிய சந்திப்புகளும் நிகழும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் மாத ராசிப் பலன்கள் - மேஷம்